ADDED : ஜூன் 08, 2024 05:41 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக பெண்கள் புனிதநீரை ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நாளை காலை 7.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி யாக சாலை பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு புனித தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
ஏராளமான பெண்கள், சிறுமிகள் வாழ வந்த அம்மன் கோயிலில் புனித நீரை எடுத்து கொட்டும் மழையில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் வரை ஊர்வலமாக வந்து கோயிலை சுற்றி வலம் வந்தனர்.
மூன்றாம் கால பூஜையில் பரிவார மூர்த்தி களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. இதையடுத்து நாளை காலை 7:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.