ADDED : ஜூன் 06, 2024 06:25 AM

விருதுநகர் : விருதுநகரில் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.
விருதுநகரில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. வெப்பச்சலன வெயில் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இந்நிலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மதியம் 3:00 மணி முதல் குளுமையான சூழல் நிலவியது. அதை தொடர்ந்து பலத்த இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.
இந்நிலையில் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பஸ் ஸ்டாண்டை சுற்றி மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. அதை சுற்றியுள்ள வடிகால்களில் அதிகளவில் நீர் தேங்கி பின் வடிந்தது.