ADDED : ஜூன் 15, 2024 07:00 AM
விருதுநகர் : தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் செய்திக்குறிப்பு: 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களின் மூலம் கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை, விபத்து, பணியிடத்து விபத்து மரணம், விபத்து ஊனம், ஒய்வூதியம் ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது.
2023 -- 24ம் கல்வி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் கடைசி தேதி மே 31ல் முடிவடைந்தததால் சில தொழிலாளர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இந்த உதவித்தொகைக்கு விண்ணபிக்க முடியாதவர்கள் அமைப்புசாரா தொழிலாளர்கள் இணையதளம் tnuwwb.tn.gov.inல் ஜூலை 31 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம், என்றார்.