ADDED : ஜூன் 09, 2024 03:05 AM
சிவகாசி, : சிவகாசி திருத்தங்கல் கண்ணகி காலனியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி மகள் முனீஸ்வரி 17. 9 ம் வகுப்பு வரை படித்த இவர் வீட்டில் இருந்து வந்தார்.
இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று அவரது தாயார் வேலைக்கு சென்று விட்டு மாலையில்வீட்டுக்கு வந்து பார்த்தபோது முனீஸ்வரி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.