ADDED : ஜூன் 11, 2024 07:19 AM
சிவதாசி: சிவகாசி வடக்கு ரத வீதியில் துணிக்கடை உள்ளது. நேற்று காலை 10:00 மணி அளவில் யூ.பி.எஸ்., வைக்கப்பட்டிருந்த அறையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
இதில் மின் உபகரணங்கள் எரிந்து சேதமானது. சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.