ராஜபாளையம்: ராஜபாளையம் அழகாபுரியை சேர்ந்தவர் கோகிலா 40, கணவர் முருகன். சாக்கு தைக்கும் தொழில் புரியும் முருகன் தனியார் நிதி உதவி மூலம் வீடு கட்டியுள்ள நிலையில் மனைவியின் குழு கடனிலிருந்து தவணையை கட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் உடல்நிலை கோளாறு காரணமாக பணிக்கு செல்ல முடியாமல் இருந்த கோகிலா வருவாய ஈட்ட முடியாமல் எவ்வாறு கடனை அடைப்பது என்று புலம்பி தற்கொலை செய்து கொண்டார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.