/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திருத்தங்கலில் தெருநாய்களால் அச்சம் திருத்தங்கலில் தெருநாய்களால் அச்சம்
திருத்தங்கலில் தெருநாய்களால் அச்சம்
திருத்தங்கலில் தெருநாய்களால் அச்சம்
திருத்தங்கலில் தெருநாய்களால் அச்சம்
ADDED : ஜூலை 29, 2024 12:13 AM
சிவகாசி: திருத்தங்கல் மாரியம்மன் கோயில் அருகே மெயின் ரோட்டில் அதிக அளவிலான நாய்கள் நடமாட்டத்தால் பள்ளி மாணவர்கள், மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
திருத்தங்கல் மாரியம்மன் கோயில் அருகே மெயின் ரோட்டில் அதிக அளவில் நாய்கள் நடமாடுகின்றன.
இங்கு பஸ் ஸ்டாப் இருப்பதோடு விருதுநகர் செல்லும் மெயின் ரோடு என்பதால் எப்போதும் போக்குவரத்து நிறைந்திருக்கும். இந்நிலையில் இப்பகுதியில் நடமாடும் நாய்களில் ஒரு சில வெறி பிடித்து போவோர் வருவோரை கடித்து துன்புறுத்துகிறது.
பயணிகள் அச்சத்திலேயே உள்ளனர். இப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வரும் மாணவர்களையும் நாய்கள் விட்டு வைப்பதில்லை. கோயிலுக்கு வருகின்ற பக்தர்களும் அவதிப்படுகின்றனர். மேலும் டூவீலரில் செல்பவர்களை விரட்டும் போது அவர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.
மொத்தமாக ரோட்டில் நாய்கள் திரிவதால் விலகிச் செல்லவும் வழி இல்லை. இதேபோல் குறுக்குப்பாதை, மெயின் பஜார், மாநகராட்சி மண்டல அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாய்கள் நடமாடி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே நாய்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.