ADDED : ஜூன் 25, 2024 12:08 AM

விருதுநகர் : விருதுநகர் போக்குவரத்து பணிமனை முன் சி.ஐ.டி.யு., சார்பில் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக பேசி முடித்தல், உட்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மண்டலத் தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நேற்று காலை 9:00 மணி முதல் இன்று காலை 9:00 மணி வரை 24 மணி நேர உண்ணாவிரதம் போராட்டம் நடக்கிறது.
இதில் மாநில உதவித் தலைவர் பிச்சை, மண்டலப் பொதுச் செயலாளர் வெள்ளத்துரை உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.