/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விளையாட்டு அரங்கில் பட்டுப்போன மரங்கள் விளையாட்டு அரங்கில் பட்டுப்போன மரங்கள்
விளையாட்டு அரங்கில் பட்டுப்போன மரங்கள்
விளையாட்டு அரங்கில் பட்டுப்போன மரங்கள்
விளையாட்டு அரங்கில் பட்டுப்போன மரங்கள்
ADDED : ஜூன் 20, 2024 04:20 AM

விருதுநகர்,: விருதுநகரின் மாவட்ட விளையாட்டு அரங்கில் பட்டு போன மரங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் அதிகளவில் மரங்கள் நடப்பட்டுள்ளன. ஓடுதளத்தை சுற்றிலும் நிறைய புங்கன், வேப்ப மரங்கள் உள்ளன.
அதே போல் வாலிபால், ஹாக்கி, கூடைப்பந்து, இறகுபந்து மைதானங்களை சுற்றிலும் மரங்கள் நடப்பட்டுள்ளன.இந்நிலையில் இவற்றில் ஒரு சில மரங்கள் பல ஆண்டுகள் ஆகி விட்டதால் பட்டு போயுள்ளன. குறிப்பாக இறகு பந்து பயிற்சி மைதானத்திற்கு அருகே சுற்றுச்சுவரை யொட்டி அடுத்தடுத்து மூன்று மரங்கள் பட்டு போயுள்ளன. தினசரி இந்த மைதானத்திற்கு நிறைய மக்கள் நடைபயிற்சிக்கு வருகின்றனர்.
இவர்களை தவிர அந்தந்த மைதானங்களில் பயிற்சி பெற வீரர்களும் வருகின்றனர். இந்நிலையில் இது போன்ற சூழலில் மரம் பட்டு போயிருப்பது ஆபத்தானது. இதன் கிளைகள் திடீரென ஒடிந்து விழவும் வாய்ப்புள்ளது. எனவே இவற்றை அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதிய மரகன்றுகளை நட வேண்டும்.