/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சிவகாசியில் தொடருது ஆக்கிரமிப்பு அகற்றம் சிவகாசியில் தொடருது ஆக்கிரமிப்பு அகற்றம்
சிவகாசியில் தொடருது ஆக்கிரமிப்பு அகற்றம்
சிவகாசியில் தொடருது ஆக்கிரமிப்பு அகற்றம்
சிவகாசியில் தொடருது ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூன் 21, 2024 03:58 AM

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாகசிவகாசி மாநகராட்சியில் இரண்டாவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
சிவகாசி தேரடி முக்கு கடைக் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோடுகளில் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்திருந்தனர். இதனால் தினமும் போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
எனவேஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனதினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது நாளாக சிவன் மாட வீதி, கீழ ரத வீதி, என்.ஆர்.கே.ஆர்., ரோடு, காந்தி ரோடு ஆகிய பகுதிகளில் ரோட்டில் ஆக்கிரமித்திருந்த கடைகள் அகற்றப்பட்டது.