ADDED : ஜூன் 15, 2024 07:04 AM
சாத்துார் : சாத்துார் கிருஷ்ணசாமி கலை ,அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
கல்லுாரி தலைவர் ராஜு தலைமை வகித்தார். செயலாளர் முத்துக்குமார் முன்னிலையில் வகித்தார். முதல்வர் உஷா தேவி வரவேற்றார்.
20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாமில் பங்கு பெற்றனர் முன்னாள் மாணவர்களும் நிறைவு ஆண்டு மாணவர்களும் பிற கல்லுாரியிலிருந்து வந்திருந்த மாணவர்களும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்.
200 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விஸ்வநாதன் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.