/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ யானை வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றவும், , காட்டுபன்றிகளை கட்டுப்படுத்தவும் வேண்டும். குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல் யானை வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றவும், , காட்டுபன்றிகளை கட்டுப்படுத்தவும் வேண்டும். குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
யானை வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றவும், , காட்டுபன்றிகளை கட்டுப்படுத்தவும் வேண்டும். குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
யானை வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றவும், , காட்டுபன்றிகளை கட்டுப்படுத்தவும் வேண்டும். குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
யானை வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றவும், , காட்டுபன்றிகளை கட்டுப்படுத்தவும் வேண்டும். குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 22, 2024 04:49 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் யானை வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் , காட்டுபன்றிகளை கட்டுப்படுத்துவதும் எப்போது என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.
விருதுநகரில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின் நடத்தப்படும் முதல் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ், வேளாண் இணை இயக்குனர் விஜயா, தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்
ராமச்சந்திரராஜா, தமிழக விவசாயிகள் சங்கம்: ராஜபாளையம் அய்யனார் கோவில் பீட், செண்பகத்தோப்பு ராக்காச்சி அம்மன் கோயில் பீட் போன்ற யானை வழித்தடங்களில் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இது தொடர்பாக வனத்துறையிடம் புகார் அளித்தால் ஷோகாஸ் நோட்டீஸ் அளித்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் வேறு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. காட்டுபன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து எடுக்க வேண்டும்.
அம்மையப்பன், ராஜபாளையம்: கொப்பரை தேங்காய்க்கு சோலார் உலர்த்திகள் மானிய விலையில் கிடைக்க வேளாண் விற்பனை வணிகத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜயமுருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: இந்தாண்டு 400 மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சொற்ப அளவே கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொப்பரையை ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும். ராஜபாளையத்தில் மட்டும் தற்போது கொள்முதல் செய்யப்படுகிறது. வத்திராயிருப்பிலும் கொள்முதல் செய்ய வேண்டும். மாமரத்தில் பூக்கள் உதிர்ந்துள்ளது. தென்னை வெள்ளை ஈ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்.
நாச்சியார் நேர்முக உதவியாளர் பயிர்க்காப்பீடு மூலம் எழுதி அனுப்பி உள்ளோம். வந்ததும் வரவு வைக்கப்படும்.
ராமமூர்த்தி, ஸ்ரீவில்லிபுத்துார்: கொத்தன்குளம் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதற்கு தற்போது வரை தீர்வு எட்டப்படவில்லை. ராஜபாளையம் நகராட்சியின் குப்பை காயல்குடி ஆற்றில் கொட்டுகின்றனர்.
ஜெயசீலன், கலெக்டர்: ராஜபாளையம் தாசில்தாருக்கும், நீர்வளத்துறை அதிகாரிகளும் உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
ஞானகுரு, மம்சாபுரம்: 2022-23ல் மாமர பாதிப்புக்கு இழப்பீடு வரவே இல்லை. சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இன்று வரை தீர்வு எட்டப்படவில்லை.
சிவசாமி, முடுக்கன்குளம்: காட்டுப்பன்றிகள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
மச்சேஸ்வரன், நரிக்குடி: காட்டுப்பன்றிகளின் வசிப்பிடமாக சீமைக்கருவேல மரங்கள் உள்ளன. மாவட்ட நிர்வாகம் சீமை கருவேலத்தை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பயிர் சேதத்தால் கடுமையான பாதிப்பை சந்திக்கிறோம்.
சந்திரசேகர், வெம்பக்கோட்டை: வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு வழங்கப்படும் இழப்பீடு தொகை போதுமானதாக இல்லை. இதை உயர்த்தி வழங்க வேண்டும் .
அழகர்சாமி, திருத்தங்கல்: திருத்தங்கலில் வாழை சாகுபடி அதிகம் நடந்து வருகிறது. இதை இன்னும் மேம்படுத்த வேளாண்துறையினர் அதை குறித்தறிவிக்கை செய்யப்பட்ட பயிராக அறிவித்து காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.
அங்குமுத்து, திருச்சுழி: திருச்சுழியில் உள்ள கிரஷர் கழிவு கண்மாயின் வரத்து கால்வாயில் விடப்படுகிறது. இதனால் மாசு ஏற்பட்டு தோல் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஜெயசீலன், கலெக்டர்: மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரிடம் உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடுகிறேன்.
முருகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: மம்சாபுரம் கால்நடை மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் வேண்டும்.
கணேசன், வாடியூர்: சிவகாசி ஒன்றியம் பெரியவாடியூர் கண்மாயில் அரை ஏக்கர் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். அதே போல் அர்ஜூனா நதியின் கன்னிசேரி தடுப்பணையில் பட்டாசு கழிவுகள் கலந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ராம்பாண்டி, காவிரி வைகை குண்டாறு விவசாயிகள் கூட்டமைப்பு: காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வீடுகளின் கழிவுநீர் தோப்பூர் கண்மாய் வரத்து ஓடையில் கலப்பதை தடுக்க வேண்டும்.
கருப்பசாமி, ஆமத்துார்: விருதுநகர் அருகே ஆமத்துார் சுற்றுவட்டார பகுதிகளில் 2023 வடகிழக்கு பருவமழையின் போது சரிவர களை எடுக்க முடியாமல் போனது. இதனால் பயிர் பாதிக்கப்பட்டது. மகசூல் குறைந்தது. இழப்பீடு வழங்க வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்ரியா, என்.மேட்டுப்பட்டி: திருநங்கையாகிய எங்களுக்கு அரசு திட்டத்தில் ஆடுகள் வழங்கி வாழ்வாதாரம் மேம்பட உதவ வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.