/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மின்கம்பத்தில் இடியாப்ப சிக்கலில் மின் வயர்கள்: மின்தடையால் அவதி மின்கம்பத்தில் இடியாப்ப சிக்கலில் மின் வயர்கள்: மின்தடையால் அவதி
மின்கம்பத்தில் இடியாப்ப சிக்கலில் மின் வயர்கள்: மின்தடையால் அவதி
மின்கம்பத்தில் இடியாப்ப சிக்கலில் மின் வயர்கள்: மின்தடையால் அவதி
மின்கம்பத்தில் இடியாப்ப சிக்கலில் மின் வயர்கள்: மின்தடையால் அவதி
ADDED : ஜூன் 25, 2024 12:08 AM

சிவகாசி : சிவகாசி பராசக்தி காலனி முதல் தெருவில் ஒரே மின்கம்பத்தில் இருந்து 50 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது.
சிவகாசி பராசக்தி காலனி முதல் தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் இருந்து 50 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகின்றது.
அதிகமான மின் இணைப்புகள் இருப்பதால் இடியாப்ப சிக்கல் போல காட்சியளிக்கின்றது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது. இதனை சரி செய்வதற்காக வருகின்ற மின்வாரிய ஊழியர்கள் ஒவ்வொரு முறையும் சரியான மின் வயரை கண்டுபிடித்து சரி செய்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்.
தவிர இந்த மின்கம்பம் சேதம் அடைந்துள்ளதால் அதில் ஏறுவதற்கும் மின் ஊழியர்கள் அச்சப்படுகின்றனர். எனது இப்பகுதியில் சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைப்பதோடு மற்றொரு மின் கம்பம் அமைத்து மின் இணைப்புகளையும் பிரித்துக் கொடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.