/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ செயல்படாத சுகாதார வளாகம்: பள்ளமான தெருக்கள்--- செயல்படாத சுகாதார வளாகம்: பள்ளமான தெருக்கள்---
செயல்படாத சுகாதார வளாகம்: பள்ளமான தெருக்கள்---
செயல்படாத சுகாதார வளாகம்: பள்ளமான தெருக்கள்---
செயல்படாத சுகாதார வளாகம்: பள்ளமான தெருக்கள்---
ADDED : ஜூன் 24, 2024 11:59 PM
தளவாய்புரம் : உடலை பதம் பார்க்கும் தெருக்கள், குடியிருப்பு அருகே திறந்த வெளி கிணறுகள், சமூக நலக்கூடம் வசதியின்மை உட்பட பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி அயன் கொல்லங் கொண்டான் ஊராட்சி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது அயன் கொல்லம் கொண்டான் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள அரசு பள்ளியை சுற்றி சிமெண்ட் அல்லது தார் ரோடு போடாமல் மண் ரோடாக விட்டுள்ளதால் மழை காலங்களில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
மகளிருக்கான சுகாதார வளாகங்கள் முழு செயல்பாட்டில் இல்லை. நடுத்தெரு தெற்கு தெரு உட்பட நான்கு இடங்களில் திறந்த வெளி கிணறு அபாயம் உள்ளது. கண்மாயின் பிரதான ஓடைப்பகுதியாக உள்துடன், குடியிருப்பு இடையே வாறுகால் கழிவுகள் அடைப்பால் கொசுக்களின் பெருக்கம் தொற்றை ஏற்படுத்துகிறது.
புதிய பகுநிகளுக்கு போதிய தெரு விளக்குகள் வசதி ஏற்படுத்தவில்லை. சமூக நலக்கூடம் இல்லாததால் கிராமத்தில் நடைபெறும் வீட்டு விசேஷங்களை திறந்த வெளியிலும், அதிக செலவு செய்தும் நடத்த வேண்டியுள்ளது. ஊராட்சி அலுவலகம் எதிரே பயணிகள் நிழற்குடை சிதிலமடைந்துள்ளதால் மழைக்காலத்தில் மாணவர்கள் சிக்கலை சந்திக்கின்றனர்.