ADDED : ஜூலை 03, 2024 05:30 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் சர்வதேச பள்ளியில் தேசிய மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி தலைமை வகித்தார். முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். விழாவில் டாக்டர்கள் விஜு ஆண்டோ பிரபு, ஜாபர், முத்துராமன், செல்வராஜ் பேசினர். பள்ளியின் சார்பில் டாக்டர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விழாவில் பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள், துணை முதல்வர் பாண்டீஸ்வரி, ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.