ADDED : ஜூலை 04, 2024 12:49 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் ரோட்டரி சங்கத்தின் சார்பில் உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
ரோட்டரி முன்னாள் உதவி ஆளுநர் முத்துராமலிங்ககுமார் தலைமை வகித்தார். சங்கத் தலைவர்ஜெயராஜ், டாக்டர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து மருத்துவ உபகரணங்களை வழங்கினார். இதனை டாக்டர் காளிராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் செல்வகுமார், பொருளாளர் முத்துவேல் ராஜா மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். செயலாளர் சின்னத்தம்பி நன்றி கூறினார்.