ADDED : ஜூலை 02, 2024 06:35 AM
விருதுநகர் : விருதுநகர் வழியாக பயணிகள் ரயில் ஜூன் 29 ல் கன்னியாகுமரியில் இருந்து நிஜாமுதீன் வரை திருக்குறள் எக்ஸ்பிரஸ் சென்றது.
இதில் பயணித்த அடையாளம் தெரியாத முதியவர் சூலக்கரை ரயில்வே கேட் அருகே தவறி விழுந்து பலியானார். இவரது உடல் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.