/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சதுரகிரியில் பக்தர்கள் சுவாமி தரிசனம் தாமதமாக வந்தவர்கள் ஏமாற்றம் சதுரகிரியில் பக்தர்கள் சுவாமி தரிசனம் தாமதமாக வந்தவர்கள் ஏமாற்றம்
சதுரகிரியில் பக்தர்கள் சுவாமி தரிசனம் தாமதமாக வந்தவர்கள் ஏமாற்றம்
சதுரகிரியில் பக்தர்கள் சுவாமி தரிசனம் தாமதமாக வந்தவர்கள் ஏமாற்றம்
சதுரகிரியில் பக்தர்கள் சுவாமி தரிசனம் தாமதமாக வந்தவர்கள் ஏமாற்றம்
ADDED : ஜூலை 21, 2024 04:28 AM

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நேற்று மதியம் 12:00 மணியை கடந்து மிகவும் தாமதமாக வந்தவர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க படாததால் மிகுந்த தவிப்புக்கும், ஏமாற்றத்திற்கும் ஆளாகி திரும்பிச் சென்றனர்.
ஆடி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் துவங்கி நாளை வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக அறநிலைத்துறை, வனத்துறை தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று முன் தினம் 1000க்கும் மேற்பட்டவரும் நேற்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 12:00 மணியை கடந்து மதியம் 1:00 மணி வரை வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதிக்கவில்லை இதனால் நீண்ட நேரம் தவிப்புடன் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.