/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றி அமைக்க எதிர்பார்ப்பு சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றி அமைக்க எதிர்பார்ப்பு
சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றி அமைக்க எதிர்பார்ப்பு
சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றி அமைக்க எதிர்பார்ப்பு
சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றி அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 18, 2024 06:57 AM

நரிக்குடி : அ.முக்குளத்தில் சேதம் அடைந்த மின் கம்பங்களால் விபத்து அபாயம்இருப்பதால் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
நரிக்குடி அ.முக்குளத்தில் போலீஸ் குடியிருப்பு பகுதி, திருப்புவனம் ரோட்டோரத்தில் உள்ள மின் கம்பங்கள் சேதமடைந்து படு மோசமாக
எப்போது விழுமோ என்கிற அச்சம் உள்ளது. பலத்த காற்றுக்கு ஒடிந்து விழும் அபாயம் உள்ளது.ரோட்டோரத்தில் மரங்களுக்கு நடுவில் மின்கம்பங்கள் உள்ளன. இடி, மின்னல், மழை நேரங்களில் மரத்தில் மின்சாரம் பாய்ந்து ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஒரே வரிசையில் ஏராளமான மின்கம்பங்கள் சேதம் அடைந்து காணப்படுவதால், ஒரு மின் கம்பம் சாய்ந்தால் கூட ஒட்டுமொத்தமாக உடைந்து விழ வாய்ப்பு உள்ளது. விபத்திற்கு முன் சேதம் அடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.