/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கண்மாயில் மண்சரிவை தடுக்கும் முண்டுக்கல் சரிந்து கரை சேதம் கண்மாயில் மண்சரிவை தடுக்கும் முண்டுக்கல் சரிந்து கரை சேதம்
கண்மாயில் மண்சரிவை தடுக்கும் முண்டுக்கல் சரிந்து கரை சேதம்
கண்மாயில் மண்சரிவை தடுக்கும் முண்டுக்கல் சரிந்து கரை சேதம்
கண்மாயில் மண்சரிவை தடுக்கும் முண்டுக்கல் சரிந்து கரை சேதம்
ADDED : ஜூன் 08, 2024 05:37 AM

காரியாபட்டி : சொக்கனேந்தல் கண்மாய் கரை மண் சரிவை தடுக்க பதிக்கப்பட்ட முண்டுக்கல் சரிந்து சேதமடைந்து வருவதால் மறுபடியும் மண் சரிவு ஏற்படும் என விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
காரியாபட்டி சொக்கனேந்தலில் ஊரை ஒட்டி கண்மாய் உள்ளது. கரையில் உள்ள மண் சரிவு ஏற்பட்டு, சேதுமடைந்து வந்தது. மண் சரிவால் மழை நீர் சேமிக்க முடியாமல் வீணாக வெளியேறியது.
அதிக அளவில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு அடிக்கடி கரை உடைப்பு ஏற்பட்டு, ஊருக்குள் தண்ணீர் புகுந்து சேதப்படுத்தியது. கரை அருகே ரோடு செல்வதால் ரோட்டில் மண் படிந்து வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து மண் சரிவை தடுக்க முண்டுக்கல் பதிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு முன் 100 மீட்டர் தூரத்திற்கு முண்டுக்கல் பதிக்கப்பட்டது. தற்போது முண்டுக்கல் சேதம் அடைந்து சரிவு ஏற்பட்டுள்ளது.
மறுபடியும் கரை மண் சரிவு ஏற்பட்டு கரைகள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். கரை சேதம் அடைவதை தடுக்க மராமத்து பணிகள் செய்து கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.