/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 10 முதல் கலந்தாய்வு அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 10 முதல் கலந்தாய்வு
அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 10 முதல் கலந்தாய்வு
அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 10 முதல் கலந்தாய்வு
அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 10 முதல் கலந்தாய்வு
ADDED : ஜூன் 06, 2024 05:35 AM
நரிக்குடி : திருச்சுழி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ்தர் விடுத்துள்ள அறிக்கை:
திருச்சுழி அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2024 --25ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 10 முதல் நடக்கிறது. இளநிலை பாடப்பிரிவில் தமிழ் ஜூன் 10, ஆங்கிலம் 11ல், வணிகவியல் 12ல், வேதியியல் 13ல், கணினி, அறிவியல் 14ல், காலை 10:00 மணி முதல் மாலை 3 :00 மணி வரை நடைபெறும்.
கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்ப நகல், மாற்றுச் சான்றிதழ், 10, 11, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட இதர சான்றிதழ்கள் அசலும், ஒவ்வொரு சான்றிதழ்க்கும் 4 நகல்கள் கொண்டு வர வேண்டும்.
அத்துடன் 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், வங்கி பாஸ்புக் அசல் மற்றும் நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.