ADDED : ஜூலை 28, 2024 04:28 AM
சாத்துார், : தமிழகத்திற்கு மத்திய அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படாததை கண்டித்து சாத்துாரில் நகர காங்கிரஸ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜோதி நிவாஸ் கிழக்கு வட்டார தலைவர் சுப்பையா மேற்கு வட்டார தலைவர் கும்கி கார்த்திக் முன்னிலை வகித்தனர்.
வெம்பக்கோட்டை வட்டார தலைவர்கள் செல்வக்கனி கணேசன் பேசினர். மகளிர் தலைவி எலிசா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.