ADDED : ஜூலை 13, 2024 07:12 AM
சாத்துார், : சாத்துார் எஸ்.ஆர்.என்.எம். கல்லுாரியில் தமிழ் துறை சார்பில் செவ்வியல்இலக்கியங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். முதல்வர் ராஜகுரு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு பாட நுால் மற்றும் கல்விச் சேவைகள் கழகம் இணை இயக்குனர் சங்கரசரவணன் சங்கத்தின் தங்கம் குரல் என்ற தலைப்பில் பேசினார்.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர்திருமலை வாழும் செவ்வியல் இலக்கியம் என்ற தலைப்பிலும், தமிழ் ஆசிரியர் பாலகிருஷ்ணன் திருக்குறள் தெவிட்டாததெள்ளமுது என்ற தலைப்பிலும் பேசினர்.
கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கரிசல் இலக்கிய கழக செயலாளர் டாக்டர் அறம் பேசினார்.
ஒருங்கிணைப்பாளர்கள் கவிதா, ராமனாதன் நன்றி கூறினர்.