ADDED : ஜூன் 15, 2024 07:09 AM

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் ரத்த தான தினத்தை முன்னிட்டு முகாம் நடந்தது. இதில் கலெக்டர் ஜெயசீலன் ரத்த தானம் செய்தார். மேலும் மருத்துவக்கல்லுாரியில் மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட ரத்த தான முகாம்களில் அதிக முறை ரத்த தானம் செய்த கொடையாளர்களுக்கு பாராட்டு சான்று, கேடயம் வழங்கி பேசியதாவது:
ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்கு தேவைப்படும் ரத்த அளவில் பாதியளவுதான் கிடைப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ரத்தம் தேவைப்படும் காலகட்டத்தில் தேடி அலைய வேண்டிஉள்ளது. மாணவர்கள், மக்களுக்கு விழிப்புணர்வு அளிப்பதன் மூலம் தொடர்ச்சியாக மருத்துவமனைக்கு தேவையான ரத்தத்தை பெற முடியும். என தெரிவித்தார்.
செவிலியர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. இதில் மருத்துவக் கல்லுாரி டீன் சீதாலட்சுமி, டாக்டர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.