ADDED : ஜூலை 27, 2024 05:40 AM
விருதுநகர் : விருதுநகரில் ராஜபாளையம் ரமணா சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பயிலும் 40 மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது: இப்போதுள்ள சூழ்நிலையில் உங்கள் பெற்றோரை காட்டிலும் உங்களுக்கு வாழ்க்கையில் படிப்பதற்கும், உங்கள் இலக்கு, ஆசை, லட்சியத்தை அடைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். உங்கள் லட்சியத்தை அடைவதற்கு உங்களுடைய பின்புலமோ, ஏழையா, வசதி படைத்தவரா, நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பது முக்கியமில்லை, நீங்கள் எங்கு போய் சேர்கிறீர்கள், உங்கள் லட்சியத்தை எவ்வாறு அடைகிறீர்கள் என்பதுதான் முக்கியம், என்றார். மாணவர்களிடம் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான தங்களது சந்தேகங்களை கலெக்டரிடம் கேட்டு தெளிவு படுத்திக்கொண்டனர்