ADDED : ஜூலை 07, 2024 01:40 AM
விருதுநகர்: விருதுநகரில் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1, 2 ல் சிறப்பாக படிக்கும் மாணவர்களுடன் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி நடந்தது. 75-வது முறையாக நடக்கும் இந்த கலந்துரையாடலில் கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது:
கல்லுாரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும், என்றார். இந்த சந்திப்பு தங்களுக்கு ஊக்கமளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கலெக்டருக்கு நன்றியை தெரிவித்தனர்.