/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சுள்ளங்குடி கிராமத்தினர் தரமற்ற குடிநீரால் அவதி சுள்ளங்குடி கிராமத்தினர் தரமற்ற குடிநீரால் அவதி
சுள்ளங்குடி கிராமத்தினர் தரமற்ற குடிநீரால் அவதி
சுள்ளங்குடி கிராமத்தினர் தரமற்ற குடிநீரால் அவதி
சுள்ளங்குடி கிராமத்தினர் தரமற்ற குடிநீரால் அவதி
ADDED : ஜூன் 17, 2024 12:09 AM
நரிக்குடி : நரிக்குடி சுள்ளங்குடியில் குடிநீர் உப்புத் தண்ணீராக இருப்பதால் சிறுநீரக கோளாறு, காலில் வீக்கம் , உயிர் பலி அதிகரித்து வருவதால் மினரல் பிளான்ட் அமைக்க அக்கிராமத்தினர் வலியுறுத்தினர்.
நரிக்குடி சுள்ளங்குடியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு சப்ளை செய்யப்படும் குடிநீர் உப்புத் தண்ணீராக இருக்கிறது. வேறு வழியின்றி சமையல், குடிநீருக்கு பயன்படுத்தினர். சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்களில் வீக்கம் ஏற்பட்டு, அதிக அளவில் உயிர் பலி ஏற்பட்டு வருகிறது. இதற்குப் பயந்து கொண்டு தற்போது உப்புத் தண்ணீரை பயன்படுத்துவதில்லை. நல்ல தண்ணீர் சப்ளை கேட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. 10 மாதங்களாக 5 கி.மீ., தூரம் உள்ள குறையறைவாசித்தான் கிராமத்துக்குச் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர். தினமும் நடந்து சென்று எடுத்து வருவதால் பெரிதும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அக்கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு மினரல் பிளான்ட் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.