ADDED : ஜூன் 21, 2024 03:48 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
பன்முக திறமைக்கான விருதான பத்ம விருது 2025 குடியரசு தின விழாவில் வழங்கப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவத் துறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவர்களுக்கு மாநில அளவில் வழங்கப்படும் விருதாகும். செப். 15க்குள் பன்முக திறமை புரிந்த நபர்களிடமிருந்து கருத்துரு www.padmaawards.gov.in இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது.
தகுதியான நபர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்த விபரத்தினை மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும், என்றார்.