/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கொலையான முன்னாள் ராணுவ வீரர் எலும்புகள் கண்டெடுப்பு கொலையான முன்னாள் ராணுவ வீரர் எலும்புகள் கண்டெடுப்பு
கொலையான முன்னாள் ராணுவ வீரர் எலும்புகள் கண்டெடுப்பு
கொலையான முன்னாள் ராணுவ வீரர் எலும்புகள் கண்டெடுப்பு
கொலையான முன்னாள் ராணுவ வீரர் எலும்புகள் கண்டெடுப்பு
ADDED : மார் 14, 2025 01:55 AM

காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கொலை செய்து கொதிக்கும் தாரில் வீசப்பட்ட முன்னாள் ராணுவ வீரரின் எலும்புகளை போலீசார் மீட்டனர். அதே இடத்திலேயே டாக்டர்கள் உடற்கூராய்வு செய்தனர்.
காரியாபட்டி மேலஅழகியநல்லூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் துரைப்பாண்டி 62. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். ஜன., 27ல் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. மார்ச் 1 குன்றக்குடி போலீசில் குடும்பத்தினர் புகார் செய்தனர். இதில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மார்ச் 5ல் விருதுநகர் ஒண்டிப்புலிநாயக்கனூர் ராம்குமார் மற்றும் துரைப்பாண்டியின் நண்பரான மேல அழகியநல்லூர் பாண்டியை போலீசார் விசாரித்தனர்.
காரியாபட்டி ஜோகில்பட்டியில் தார் பிளான்ட்டில் வேலை செய்து வந்த ராம்குமாரும், பாண்டியும் துரைப்பாண்டிக்கு கார் வாங்கி கொடுத்து, அதிக கமிஷன் எடுத்துள்ளனர். அதை அறிந்து போலீசில் புகார் கொடுக்கப்போவதாக துரைப்பாண்டி மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அவரை கட்டையால் தலையில் அடித்து கொலை செய்து, கொதிக்கும் தாரில் மூழ்கடித்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
நேற்று தாரை சூடேற்றி எலும்புகளை போலீசார் 20 மணி நேரம் போராடி கண்டறிந்தனர். பிறகு டாக்டர்கள் அதே இடத்தில் உடற்கூராய்வு செய்தனர். சிவகங்கை எஸ்.பி., ஆசிஷ்ராவத், டி.எஸ்.பி., பார்த்திபன் பார்வையிட்டனர். இருவரிடமும் குன்றக்குடி போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.