ADDED : ஜூலை 14, 2024 04:02 AM
விருதுநகர் : விருதுநகரில் பி.ஐ.எஸ்., எனும் இந்திய தர நிர்ணய அமைவனம் சார்பில் தங்க நகை வியாபாரிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் பி.ஐ.எஸ்., ஹால்மார்க்கிங் திட்டம், விதிமுறைகள் பற்றி விளக்கப்பட்டது. பி.ஐ.எஸ்., மதுரை கிளை இயக்குனர் தயானந்த் பி.ஐ.எஸ்., ஜூவல்லர்ஸ் பதிவிற்கான விண்ணப்பம், பதிவுக் கட்டணங்களை நீக்குதல், பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், குறிப்பாக ஹால்மார்க்கிங் மையங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள நகைக்கடைகளின் தேவைகள் குறித்தும் பேசினார். விருதுநகர் நகை வியாபாரிகள் சங்கத் தலைவர்சங்கரன், செயலாளர் செந்தில் குமார், அருப்புக்கோட்டை நகை வியாபாரிகள் சங்கச் செயலாளர் ரகுராமன் பேசினர்.பி.ஐ.எஸ்., இணை இயக்குநர் ஹேமலதா பேசினார்.