/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பாம்பு, நாய்கடிக்கு ஆரம்ப சுகாதாரநிலையங்களில் மருந்துகள் இருப்பு மாவட்ட சுகாதார அலுவலர் தகவல் பாம்பு, நாய்கடிக்கு ஆரம்ப சுகாதாரநிலையங்களில் மருந்துகள் இருப்பு மாவட்ட சுகாதார அலுவலர் தகவல்
பாம்பு, நாய்கடிக்கு ஆரம்ப சுகாதாரநிலையங்களில் மருந்துகள் இருப்பு மாவட்ட சுகாதார அலுவலர் தகவல்
பாம்பு, நாய்கடிக்கு ஆரம்ப சுகாதாரநிலையங்களில் மருந்துகள் இருப்பு மாவட்ட சுகாதார அலுவலர் தகவல்
பாம்பு, நாய்கடிக்கு ஆரம்ப சுகாதாரநிலையங்களில் மருந்துகள் இருப்பு மாவட்ட சுகாதார அலுவலர் தகவல்
ADDED : ஜூலை 28, 2024 04:20 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு, நாய்க்கடிக்கு சிகிச்சை அளிக்க தேவையான விஷமுறிவு மருந்துகள் தயார் நிலையில் இருப்பதாக விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி தெரிவித்தார்.
மாவட்டத்தில் நகர், ஊரகப்பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக நகர், ஆரம்ப, துணை சுகாதார நிலையங்கள் அந்தந்த பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டன. விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 2 நகர, 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 114 துணை சுகாதார நிலையங்கள் உள்ளது. சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 5 நகர, 31 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 162 துணை சுகாதார நிலையங்கள் உள்ளது.
மாவட்டத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து ரோட்டில் நடந்து, டூவீலரில் செல்பவர்கள், விளையாடும் குழந்தைகள், பெண்கள், வயதானோரை கடித்து குதறும் சம்பவங்கள் நடக்கிறது. இது போன்ற சமயத்தில் கடிப்பட்டவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அருகே உள்ள நகர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் அளிக்கப்படுகிறது.
இது தவிர விவசாய நிலங்களில் பணி செய்பவர்களை பாம்பு கடிப்பது தொடர்கதையாக உள்ளது. மேலும் எதிர்பாரத சமயத்தில் மற்றவர்களையும் பாம்புகள் கடிக்கின்றன. அப்போது கடிப்பட்டவரை அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தாலும் கடித்த பாம்பின் வகை தெரிந்தால் அதற்கு தகுந்தாற் போல சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி கூறியதாவது:மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு நாய்க்கடிக்கு 1500 டோஸ் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. பாம்பு கடித்தவருக்கு எந்த வகையான பாம்பு கடித்தது என தெரியாத சமயத்தில், அவரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ரத்த உறைதல் பரிசோதனை செய்யப்படுகிறது. அதற்கு தகுந்தாற் போல ஏ.எஸ்.வி., விஷமுறிவு மருந்து கொடுக்கப்படுகிறது.
மேலும் தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்காக மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்புக்கடி சிகிச்சைக்காக 10 டோஸ் மருந்துகள், நாய்க்கடிக்கு தேவையான மருந்துகள் தயார் நிலையில் உள்ளது, என்றார்.