ADDED : ஜூலை 22, 2024 04:18 AM
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து விருதுநகர் எஸ்.பி. பெராஸ்கான் அப்துல்லா நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
இக்கோயிலில் ஆக. 1-ல் பிரதோஷமும், 4ல் ஆடி அமாவாசை வழிபாடும் நடக்கிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர்.
இதனை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பு, வாகன பார்க்கிங் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து விருதுநகர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா நேரடி ஆய்வு மேற்கொண்டார். பஸ் ஸ்டாண்ட், வாகன காப்பகம், பக்தர்கள் நடந்து செல்லும் பாதைகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து தாணிப்பாறையில் இருந்து கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை வரை நேரில் பார்வையிட்டார். ஆய்வின்போது டி.எஸ்.பி. முகேஷ் ஜெயகுமார் உடனிருந்தார்.