/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பட்டா மாறுதலுக்கு இ- சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் பட்டா மாறுதலுக்கு இ- சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்
பட்டா மாறுதலுக்கு இ- சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்
பட்டா மாறுதலுக்கு இ- சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்
பட்டா மாறுதலுக்கு இ- சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 13, 2024 05:12 AM
விருதுநகர்: விருதுநகர், திருச்சுழியைச் சேர்ந்தவர்கள் நத்தம் பட்டா மாறுதலுக்கு இ- சேவை மையம், சிட்டிசன் போர்ட்டல் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் விருதுநகர், திருச்சுழி பகுதிகளில் நத்தம் ஆவணங்கள் இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தின் மூலம் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை மக்கள் இ- சேவை மையம், சிட்டிசன் போர்ட்டல் (https://eservices.tn.gov.in/citizen) விண்ணப்பிக்கலாம்.
இணைய வழியில் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, நத்தம் பட்டா வழங்கப்படும்.
மேலும் கிராம நத்தம் பகுதிகளுக்கான நத்தம் மனை பட்டாக்களை https://eservices.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இந்த இருபகுதிகளிலும் இ- சேவை மையம், சிட்டிசன் போர்ட்டல் மூலம் மட்டுமே நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.
இந்த இணைய தளம், தமிழ்நிலம்' செயலி மூலம் நில அளவைத் தொடர்பான விவரங்களைப் பார்வையிட்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.