/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு
புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு
புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு
புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு
ADDED : ஜூன் 02, 2024 03:15 AM
சாத்துார்: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரி தேசிய மாணவர் படை 9 தமிழ்நாடு சைகை கம்பெனி சார்பில் உலகப் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கமாண்டிங் ஆபிசர் சுபேதார் சுரேந்திர பாண்டியன் தலைமை வகித்தார் .ஹவில்தார் ரகுநந்தன் முன்னிலை வகித்தார். கல்லுாரி டீன் பரமசிவன் வாழ்த்தினார். தேசிய மாணவர் படை மாணவி ஜானவி வரவேற்றார். முதல்வர் காளிதாசமுருகவேல் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.
சாத்துார் வெஸ்டிஜ் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் மேலாளர் மாரிமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். புகையிலையால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் குறித்து விளக்கினார். கல்லுாரி தேசிய மாணவர் படை அதிகாரி மேஜர் பிரகாஷ் மற்றும் மாணவர் படை மாணவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.