/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆண்டாள் கோவிலில் அன்னக்கொடை உத்சவம் ஆண்டாள் கோவிலில் அன்னக்கொடை உத்சவம்
ஆண்டாள் கோவிலில் அன்னக்கொடை உத்சவம்
ஆண்டாள் கோவிலில் அன்னக்கொடை உத்சவம்
ஆண்டாள் கோவிலில் அன்னக்கொடை உத்சவம்
ADDED : மார் 12, 2025 08:16 PM

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு அன்னக்கொடை உத்சவம் நடந்தது.
இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று அன்னக்கொடை உத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை 11:00 மணிக்குமேல் வெள்ளிக் குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்க மன்னார் முன், தயிர் சாதம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக தயிர்சாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், பட்டர்கள் செய்திருந்தனர்.