ADDED : ஜூலை 04, 2024 12:50 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ரங்காராவ் லயன்ஸ் மெட்ரிக் பள்ளிகள் சார்பில், 1984 முதல் 2023 வரை படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி ரங்காராவ் லயன்ஸ் பெண்கள் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்தது.
விழாவில் பள்ளி தலைவர் சுந்தரராஜ பெருமாள், தாளாளர் விஜயகுமார், பொருளாளர் டாக்டர் பால்சாமி, அரிமா சங்க நிர்வாகிகள் ஆரியன் மதுரம், கூடலிங்கம், மூத்த உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர்.
விழாவில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின்நிர்வாகிகள் தேர்வு நடந்தது. வினாடி வினா, நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில் இரு பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், அரிமா சங்கத்தினர், பள்ளி அலுவலர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.