/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அகில இந்திய ஹாக்கி போட்டி; போபால் நேஷனல் அணி வெற்றி அகில இந்திய ஹாக்கி போட்டி; போபால் நேஷனல் அணி வெற்றி
அகில இந்திய ஹாக்கி போட்டி; போபால் நேஷனல் அணி வெற்றி
அகில இந்திய ஹாக்கி போட்டி; போபால் நேஷனல் அணி வெற்றி
அகில இந்திய ஹாக்கி போட்டி; போபால் நேஷனல் அணி வெற்றி
ADDED : ஜூன் 04, 2024 05:44 AM

சாத்துார் : கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் நடந்த அகில இந்திய அளவிலான ஹாக்கி இறுதிப்போட்டியில் போபால் நேஷனல் சென்டர் ஆப் எக்ஸ்ஸலன்ஸ் அணி வெற்றி பெற்றது.
கே .ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில் கே. ஆர் கல்வி நிறுவனங்கள் லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகடாமி இணைந்து லட்சுமி அம்மாள் நினைவு கோப்பை 13-வது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் மே 24 முதல் ஜூன் 2 வரை கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் செயற்கை புல்வெளி மைதானத்தில் நடந்தது.
இந்திய அளவில் 16 அணிகள் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர். கால் இறுதி ஆட்டம் வரை லீக்முறையிலும் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் அனைத்தும் நாக்அவுட் முறையில் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு இறுதிப் போட்டியை கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
போபால் நேஷனல் சென்டர் அணி வெற்றி பெற்று லட்சுமி அம்மாள் அகில இந்திய நினைவு ஹாக்கி சுழற் கோப்பை மற்றும் ரொக்க பரிசு ஒரு லட்சம் பெற்றது. 2ம் இடம் பெற்றபுபனேஸ்வர் நிஸ்வாஸ் அணிக்கு ரூ 75 ஆயிரம் ரொக்கப் பரிசும், 3ம் இடம் பெற்ற நியூடெல்லி இந்தியன் ஆயில் அணிக்கு ரூ 50ஆயிரம் ரொக்கப் பரிசும், 4ம் இடம் பெற்ற பெங்களூரு கனரா பேங்க் அணிக்கு ரூ 30 ஆயிரம் பரிசு மற்றும் நினைவு கோப்பை வழங்கப்பட்டது.
காலிறுதி போட்டியில் விளையாடிய சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப், சென்னை இந்தியன் பேங்க், கோவில்பட்டி எஸ். டி. ஏ. டி. எக்ஸலன்ஸ், சென்னை இன்கம் டேக்ஸ் ஆகிய அணிகளுக்கு ஆறுதல் பரிசாக ரூ 20,000 வழங்கப்பட்டது.
இறுதி போட்டியில் போபால்நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸ்ஸலன்ஸ் அணி 3:1 கோல் அடித்து புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணியை வென்றது. சிறந்த கோல் கீப்பர், சிறந்த முன்கள ஆட்டக்காரர், சிறந்த தடுப்பாளர், சிறந்த நடுகள வீரர் விருதும் வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
பரிசு வழங்கும் விழாவிற்கு கே.ஆர்.குழுமங்களின் துணைத் தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், தலைமை வகித்தனர்.கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., பரிசுகள் வழங்கினார்.
நிர்வாக குழு உறுப்பினர் சி. ராமசாமி நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குனர் எஸ். சண்முகவேல், லட்சுமி அம்மாள் பாலி டெக்னிக் முதல்வர் ராஜேஸ்வரன், கே.ஆர்.கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் மதிவண்ணன், பொறியியல் கல்லுாரி முதல்வர் காளிதாசமுருகவேல், பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.