/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குறைதீர்க்கும் கூட்டம் ஒத்தி வைப்பு விவசாயிகள் அலைக்கழிப்பு குறைதீர்க்கும் கூட்டம் ஒத்தி வைப்பு விவசாயிகள் அலைக்கழிப்பு
குறைதீர்க்கும் கூட்டம் ஒத்தி வைப்பு விவசாயிகள் அலைக்கழிப்பு
குறைதீர்க்கும் கூட்டம் ஒத்தி வைப்பு விவசாயிகள் அலைக்கழிப்பு
குறைதீர்க்கும் கூட்டம் ஒத்தி வைப்பு விவசாயிகள் அலைக்கழிப்பு
ADDED : ஜூன் 19, 2024 05:05 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் விவசாயிகள் கூட்டம் ஒத்தி வைப்பது குறித்து முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமல் அலைக்கழிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
கலெக்டர் ஜெயசீலன் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி பகுதிகளில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவதாக நேற்று அறிவித்தார்.
அதன்படி கூட்டம் அருப்புக்கோட்டையை தவிர மற்ற ஊர்களில் நடந்தது. அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு நேற்று காலை 9:30 மணிக்கு திருச்சூழி, நரிக்குடி, காரியாபட்டி, வடக்கு நத்தம் உட்பட பகுதிகளில் இருந்து விவசாயிகள் வந்திருந்தனர். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அலுவலர்கள் ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு ஜமாபந்திக்கு சென்றுள்ளதால் கூட்டம் மாலை தான் நடக்கும் என கூறியுள்ளனர். இதனால் காத்திருந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.