Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வேப்பங்குளத்தில் இடிக்கப்பட்டு வீடு இழந்தோருக்கு புதிய இடம்

வேப்பங்குளத்தில் இடிக்கப்பட்டு வீடு இழந்தோருக்கு புதிய இடம்

வேப்பங்குளத்தில் இடிக்கப்பட்டு வீடு இழந்தோருக்கு புதிய இடம்

வேப்பங்குளத்தில் இடிக்கப்பட்டு வீடு இழந்தோருக்கு புதிய இடம்

ADDED : ஜூலை 07, 2024 01:48 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வேப்பங்குளத்தில் ஆக்கிரமிப்பால் இடிக்கப்பட்டு வீடு இழந்த 10 பேர் குடும்பத்தினருக்கு புதிய இடத்தில் வீடு கட்டுவதற்கு நிலம் அளவீடு செய்யப்பட்டது.

வேப்பங்குளத்தில் நீர்நிலை கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 10 வீடுகள் நேற்று முன்தினம் இடிக்கப்பட்டது. இதனால் அங்கு வசித்த மக்கள் வீடின்றி தவித்தனர்.

இவர்கள் ஏற்கனவே இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது வீடு இழந்துள்ள சூழலில், உடனடியாக நேற்று, அட்டை மில் அரசு கலைக் கல்லூரி பின்புறம் புதிய இடத்தில் வீடு கட்டுவதற்கு தாசில்தார் முத்துமாரி, டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் முன்னிலையில் வருவாய் துறையினர் நிலம் அளவீடு செய்தனர்.

அப்போது தங்களுக்கு வீடு கட்டி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us