லீக் ஆகும் பாதாளசாக்கடை கழிவுநீர்
லீக் ஆகும் பாதாளசாக்கடை கழிவுநீர்
லீக் ஆகும் பாதாளசாக்கடை கழிவுநீர்
ADDED : ஜூன் 04, 2024 05:41 AM

விருதுநகர் : விருதுநகர் மதுரை ரோட்டில் பாதாளசாக்கடை கழிவுநீர் அடிக்கடி லீக் ஆவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நோய் தொற்று அபாயமும் ஏற்படுகிறது.
விருதுநகர் மதுரை ரோட்டில் கே.வி.எஸ்., பள்ளி அருகே உள்ள மேன்ஹோல் அடிக்கடி லீக் ஆகி வருகிறது. திருவிழா நேரங்களில் லீக் ஆன போதே இதை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் தாமதித்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் இப்பகுதியில் மேன்ஹோல் லீக் ஆகிறது. இதனால் சுகாதாரக்கேட்டுடன் மக்கள் தவிக்கும் சூழல் உள்ளது. வாகன ஓட்டிகள் வேகமாக சென்றால் பிற வாகன ஓட்டிகள் மீது கழிவுநீர் தெறிக்கிறது.
இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மேன்ஹோலில் அடிக்கடி லீக் ஆகிறது. விருதுநகரின் தோல்வி அடைந்த பாதாளசாக்கடை திட்டத்தால் மக்கள் நோய் அச்சத்தில் உள்ளனர்.