/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஓட்டை விழுந்த மேன்ஹோல்; விபத்து அச்சத்தில் மக்கள் ஓட்டை விழுந்த மேன்ஹோல்; விபத்து அச்சத்தில் மக்கள்
ஓட்டை விழுந்த மேன்ஹோல்; விபத்து அச்சத்தில் மக்கள்
ஓட்டை விழுந்த மேன்ஹோல்; விபத்து அச்சத்தில் மக்கள்
ஓட்டை விழுந்த மேன்ஹோல்; விபத்து அச்சத்தில் மக்கள்
ADDED : ஜூன் 08, 2024 05:39 AM

விருதுநகர் : விருதுநகரில் பாதாளசாக்கடை மேன்ஹோலின் மூடி நொறுங்கி விழுந்து ஓட்டை ஏற்பட்டுள்ளதால் விபத்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் ராமமூர்த்தி ரோட்டில் பாதாள சாக்கடை தீராத தலைவலியாக உள்ளது. மேன்ஹோலில் இருந்து மோட்டார் மூலம் பம்பிங் செய்து தான் கழிவுநீரை வெளியேற்ற வேண்டி உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள், மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றன. புதிய பிரச்னையாக மேன்ஹோல் மூடி மீது ஓட்டை விழுந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். இந்த ஓட்டையில் சிறு குழந்தைகள் விழும் அபாயமும் உள்ளது. அருகே நகராட்சி பூங்கா வேறு இருப்பதால், காலை, மாலை நேரங்களில் இந்த அபாயம் அதிகம் உள்ளது. சாதாரண வாகன ஓட்டிகளுக்கும் தடுமாறி ஓட்டையில் டயர் இறங்கிவிட்டால் படுகாயம் தான் அடைவர். பாதாளசாக்கடை மூடிகளை சரி செய்ய விரைவில் நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி அதிகாரிகள் கூறினர்.