/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஜூன் 10 முதல் ஜூலை 10 வரைகோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஜூன் 10 முதல் ஜூலை 10 வரைகோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ஜூன் 10 முதல் ஜூலை 10 வரைகோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ஜூன் 10 முதல் ஜூலை 10 வரைகோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ஜூன் 10 முதல் ஜூலை 10 வரைகோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ADDED : ஜூன் 06, 2024 06:06 AM
விருதுநகர், : மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாடுத் திட்டத்தில் ஜூன் 10 முதல் ஜூலை 10 வரை தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.
கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
கோமாரி நோய் என்பது வைரஸ் கிருமியால் உண்டாகும். கால்நடைகளின் வாய், குழம்பு பகுதியில் புண், காய்ச்சல், தீவனம் உண்ணாமை, கால்நடைகளுக்கு கருச்சிதைவு, சினையின் தன்மை குறைதல். இந்நோய் காற்று மூலம் பரவுவதால் ஒரு மாட்டிற்கு பாதிப்பு ஏற்பட்டாலும் பண்ணையில் அனைத்து கால்நடைகளுக்கும் பரவும்.
இந்நோய் கலப்பின மாடுகளை அதிகம் தாக்குகிறது. இறப்புகள் குறைவாக இருந்தாலும் மாட்டின் பால் உற்பத்தி குறைதல், சினை பிடிப்பு தடைபடுதல், இளங்கன்றுகளில் இறப்பு ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.
மேலும் மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் மூலம் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தேசிய கால்நடை நோய் கட்டுப்பாடுத் திட்டத்தில் ஜூன் 10 முதல் ஜூலை 10 வரை தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.
எனவே, விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பசு, எருதுகள், எருமைகள், 4 மாதங்களுக்கு மேலான கன்றுகளுக்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் தடுப்பூசி முகாமில் கால்நடைகளுக்கு போட்டு பயனடைந்து கொள்ளுங்கள் என அதில் தெரிவித்துள்ளார்.