/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ உள்ளாட்சிகளில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தியதோடு சரி l நடவடிக்கை இல்லாததால் ஆக்கிரமிப்பாளர்கள் உற்சாகம் உள்ளாட்சிகளில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தியதோடு சரி l நடவடிக்கை இல்லாததால் ஆக்கிரமிப்பாளர்கள் உற்சாகம்
உள்ளாட்சிகளில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தியதோடு சரி l நடவடிக்கை இல்லாததால் ஆக்கிரமிப்பாளர்கள் உற்சாகம்
உள்ளாட்சிகளில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தியதோடு சரி l நடவடிக்கை இல்லாததால் ஆக்கிரமிப்பாளர்கள் உற்சாகம்
உள்ளாட்சிகளில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தியதோடு சரி l நடவடிக்கை இல்லாததால் ஆக்கிரமிப்பாளர்கள் உற்சாகம்
ADDED : ஜூன் 29, 2024 04:50 AM
மாவட்டத்தில் 5 நகராட்சிகள், ஒரு மாநகராட்சியில் மெயின் பஜார்கள், மார்க்கெட்டுகள், முக்கியவீதிகள் உள்ளன. இவற்றில் மக்களின் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் காய்கறி, மளிகை, ஜவுளி, பழக்கடைகள் உள்ளன. இவற்றில் பலர் கடையை தாண்டி ரோடு வரை ஆக்கிரமிக்கின்றனர்.இதனால் மக்கள் நடந்து அல்லது வாகனங்களில் செல்லும் வழி குறுகலாகிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
மேலும் இதே பாதைகளில் தான் பலர் தங்கள் கடைகளுக்கு தேவையான பொருட்களை ஏற்றி இறக்குகின்றனர். ஒரு வழிப்பாதைகள் இரு வழிப்பாதைகளாக பயன்படுத்தப்படுகின்றன. வாகனங்கள் நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன.
இது போன்ற விதிமீறல் பஜார்கள், முக்கிய வீதிகளில் அதிகம் நடக்கிறது. இதை கட்டுப்படுத்த நகராட்சி அமைந்துள்ள அதன் எல்லைக்குட்பட்ட டி.எஸ்.பி.,க்கள் தலைமையிலும், நகராட்சி அதிகாரிகள் முன்னிலையிலும்கடை வியாபாரிகள், சாலை வியாபாரிகளை வைத்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன.
ஆக்கிரமிப்பை தடுக்க கயிறு, வெள்ளைக்கோடு, தனியே வாகன நிறுத்தம் என அறிவுறுத்தப்பட்டாலும், அவை அடுத்த சில நாட்களிலே காற்றில் விடப்படுகின்றன. இவ்வாறு விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, சாத்துார், சிவகாசி, ராஜபாளையம் பகுதிகளில் கூட்டம் நடந்துள்ளன. ஆனால் கூட்டம் நடத்தியதோடு சரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆடி மாதம் முதல் பண்டிகை காலம் வர உள்ளது. அதிகளவிலான போக்குவரத்து நெரிசலும்,அவசரம் என்றால் வாகனம் உள்ளே வர முடியாத சூழலும் பஜார்களில் உள்ளன. குறிப்பாக விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார் பஜார்களில் பெருகி வரும் ஆக்கிரமிப்புகள் மக்களை திக்குமுக்காட செய்கின்றன.
குறிப்பாக போலீசார் தரப்பிலும், நகராட்சி நிர்வாகங்கள் தரப்பிலும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் ஆக்கிரமித்து கொண்டே தான் இருக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் பிரதான ரோடுகளில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறியவும், அதை அந்த நகராட்சி நிர்வாகங்கள் அகற்ற முன் வருகிறதா என்பதை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.