அடிப்படை வசதிகள் இல்லை
நாராயணமூர்த்தி, நெசவாளர்: நாங்கள் நெசவாளர் காலனியில் குடி வந்து 23 ஆண்டுகள் ஆகிவிட்டது. எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. குடிநீர், வாறுகால், ரோடு அமைத்து தர பலமுறை ஊராட்சியில் கோரிக்கை வைத்துள்ளோம். ஊராட்சியில் மெத்தனமாக உள்ளனர். இந்தப் பகுதிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை செய்து தர வேண்டும்.
குடிநீர் இல்லை
சுப்புலட்சுமி, குடும்பதலைவி: எங்கள் நெசவாளர் காலனிக்கு மட்டும் ஊராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் வருவது இல்லை. அருகில் உள்ள ராமலிங்கா நகர் பகுதிக்குசென்று தான் குடிநீரை எடுத்து வர வேண்டி உள்ளது. மேலும் வெளியிடத்தில்தான் குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம். நாங்கள் உழைத்து பெறும் கூலி குடிநீருக்கே பாதி செலவு ஆகி விடுகிறது.
கிடங்கான தெருக்கள்
சாந்தி, குடும்ப தலைவி: காலனியில் உள்ள தெருக்கள் அனைத்தும் கற்கள் பெயர்ந்து மேடும் பள்ளமுமாக உள்ளது. குழாய்கள் பதிப்பதற்காக ரோட்டை தோண்டி கிடங்காக மாற்றி விட்டனர். வாறுகால் இல்லாமல் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நடக்க முடியாத நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக இருக்கிறது. வாகனங்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
நிதியில்லை
முத்துலட்சுமி, ஊராட்சி தலைவர், பாலையம்பட்டி: புளியம்பட்டி நெசவாளர்காலனியில் வளர்ச்சி பணிகள் செய்ய ஊராட்சியில் நிதி இல்லை. அரசு நிதி ஒதுக்கினால் வளர்ச்சி பணிகள் செய்யப்படும்.