/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குடிநீர் லீக் ஆவதை சரி செய்யாததால் குடியிருப்போர் கடும் சிரமம் குடிநீர் லீக் ஆவதை சரி செய்யாததால் குடியிருப்போர் கடும் சிரமம்
குடிநீர் லீக் ஆவதை சரி செய்யாததால் குடியிருப்போர் கடும் சிரமம்
குடிநீர் லீக் ஆவதை சரி செய்யாததால் குடியிருப்போர் கடும் சிரமம்
குடிநீர் லீக் ஆவதை சரி செய்யாததால் குடியிருப்போர் கடும் சிரமம்
ADDED : ஜூலை 21, 2024 04:25 AM

விருதுநகர்: விருதுநகர் படேல் ரோட்டில் குழாய் உடைந்து வாரக்கணக்கில் குடிநீர் லீக் ஆவதை சரி செய்யாததால் அங்கு குடியிருப்போர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
விருதுநகர் படேல் ரோட்டில் ஜூன் 28 முதல் குழாய் உடைந்து குடிநீர் லீக் ஆகி வருகிறது. இது குறித்து அப்பகுதியினர் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் தற்போது வரை குடிநீர் லீக் ஆகிறது. சரி செய்யவில்லை. இது குடிநீர் வடிகால் வாரியத்தின் பைப்லைனாக வாய்ப்புள்ளது. மக்கள் புகார் அளித்த போதே நகராட்சி நிர்வாகத்தினர் புகாை குடிநீர் வாடிகால் வாரியத்திடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை சரி செய்யாமல் உள்ளதால் மக்கள் குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி நிர்வாகம் என இரண்டின் மீதும் அதிருப்தியில் உள்ளனர். உடனடியாக இதை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.