/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/--சேத்துாரில் குடிநீர் கேட்டுமறியல்--சேத்துாரில் குடிநீர் கேட்டுமறியல்
--சேத்துாரில் குடிநீர் கேட்டுமறியல்
--சேத்துாரில் குடிநீர் கேட்டுமறியல்
--சேத்துாரில் குடிநீர் கேட்டுமறியல்
ADDED : ஜூன் 24, 2024 01:34 AM
சேத்துார்: சேத்துார் அருகே குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சேத்துார் அருகே தெற்கு தேவதானம் ஊராட்சிக்குட்பட்ட கோவிலுார் கிராமம் உள்ளது.
இப் பகுதியில் 25 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகம் முன்பு வந்தனர்.ஏற்கனவே குடியிருப்புக்கு வெகு தொலைவில் மகளிர் சுகாதார வளாகம் அமைத்துள்ளது போதிய அடிப்படை வசதி செய்து தரவில்லை என குற்றம் சாட்டினர். இதுகுறித்து ஊராட்சி தலைவர் பதில் அளிக்க வரவில்லை என கூறி ஊராட்சி அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.சேத்துார் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் ,ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.