/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ---- வெளியூர்களில் இருந்து தேவதானத்தில் முகாமிட்டுள்ள அறுவடை இயந்திரங்கள் ---- வெளியூர்களில் இருந்து தேவதானத்தில் முகாமிட்டுள்ள அறுவடை இயந்திரங்கள்
---- வெளியூர்களில் இருந்து தேவதானத்தில் முகாமிட்டுள்ள அறுவடை இயந்திரங்கள்
---- வெளியூர்களில் இருந்து தேவதானத்தில் முகாமிட்டுள்ள அறுவடை இயந்திரங்கள்
---- வெளியூர்களில் இருந்து தேவதானத்தில் முகாமிட்டுள்ள அறுவடை இயந்திரங்கள்
ADDED : ஜூன் 14, 2024 04:20 AM

சேத்துார்: சேத்தூர் தேவதானம் சுற்றுப்பகுதியில் நெற்கதிர்கள் முற்றியுள்ள நிலையில் 50க்கும் மேற்பட்ட அறுவடை இயந்திரங்கள் முகாமிட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளன.இதனால் 10 நாட்களுக்குள் அடுத்த கட்ட பணிகளுக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள தேவதானம், சேத்துார், கோவிலுார் இதனை அடுத்த சொக்கநாதன் புத்துார் சுற்று பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிற்கு நெல் சாகுபடி நடந்து வருகிறது.
தற்போது விவசாயிகள் தங்கள் நீர் இருப்பை கணக்கிட்டு பயிரிடப்பட்டிருந்த நெற்கதிர்கள் ஒருசேர முற்றிய நிலையில் அறுவடைக்காக விவசாயிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் சேலம், தென்காசி பகுதிகளில் இருந்து கதிர் அறுப்பு இயந்திரங்களை நாடியதால் அதிக இயந்திரங்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இதே நிலை நீடித்தால் 10 நாட்களில் முதல் போக அறுவடை பணிகள் முடிவடையும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்து விவசாயி மாரிமுத்து: தொடக்கத்தில் பெய்த மழை காரணமாக அறுவடை தாமதமானது. இதனால் பருவம் தாண்டிய நிலையில் அறுவடை இயந்திரங்களுக்கு காத்திருந்தோம்.
சேலம், தென்காசி பகுதிகளில் தற்போது நடவு பணிகள் தொடங்கியுள்ளதால் அப்பகுதியில் இருந்த 50-க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் சேத்துார், தேவதானம் பகுதிகளில் தொடர்ந்து அறுவடையை மேற்கொண்டுள்ளதால் முதல் போக பணிகள் முடிந்து அடுத்த கட்ட பணிகளை தொடங்க உள்ளோம்.