Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டிகள்

இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டிகள்

இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டிகள்

இளைஞர் இலக்கியத் திருவிழா போட்டிகள்

ADDED : மார் 16, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
விழுப்புரம்; விழுப்புரத்தில் இளைஞர் இலக்கிய விழா போட்டிகள் நடந்தது.

இந்தாண்டு பள்ளி கல்வித் துறை, பொது நூலக இயக்ககம் சார்பில், இளைஞர் இலக்கிய திருவிழா பொருநை, வைகை, காவிரி, சிறுவாணி மற்றும் சென்னை இலக்கிய திருவிழா என 5 மண்டலங்களில் நடந்து வருகிறது.

இதன்படி சென்னை மண்டலத்தில், விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில், விழுப்புரம் மாவட்ட நூலகத்துறையுடன் இணைந்து விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில், இளைஞர் இலக்கிய விழா போட்டிகள் இரு தினங்கள் நடந்தது.

கல்லூரி முதல்வர் அகிலா தொடங்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் வரவேற்றார். கல்லூரி மாணவியர் புல முதன்மையர் ராஜேஸ்வரி, மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட நூலக அலுவலர் காசீம் நோக்கவுரை ஆற்றினார்.

கவிஞர்கள் ஜெயச்சந்திரன், வல்லபராசு, திருக்குறள் சந்திரவதி வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட மைய நூலகர் இளஞ்செழியன், நூலகர் அன்பழகன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

பல்வேறு தலைப்புகளில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களுடன், முதல் பரிசு ரூ.5000,- இரண்டாம் பரிசு ரூ.4000, மூன்றாம் பரிசு ரூ.3000 -என மொத்தம் ரூ.1,20,000 வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் பலர் போட்டிகளில் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us