/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாநில அளவிலான பூப்பந்து போட்டி ஒய் காப் பள்ளி மாணவிகள் சாதனை மாநில அளவிலான பூப்பந்து போட்டி ஒய் காப் பள்ளி மாணவிகள் சாதனை
மாநில அளவிலான பூப்பந்து போட்டி ஒய் காப் பள்ளி மாணவிகள் சாதனை
மாநில அளவிலான பூப்பந்து போட்டி ஒய் காப் பள்ளி மாணவிகள் சாதனை
மாநில அளவிலான பூப்பந்து போட்டி ஒய் காப் பள்ளி மாணவிகள் சாதனை
ADDED : ஜூன் 12, 2025 05:14 AM

விக்கிரவாண்டி : மாநில அளவிலான ஐவர் குழு மகளிர் பூப்பந்து போட்டியில் ஒய் காப் பள்ளி மாணவிகள் வெண்கல பதக்கம் வென்றனர்.
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான ஐவர் குழு மகளிர் பூப்பந்து போட்டி சென்னை பல்லாவரத்தில் நடந்தது. இப்போட்டியில், விக்கிரவாண்டி அடுத்த முட்டத்துார் ஒய் காப் மேல்நிலை பள்ளி மாணவிகள் பங்கேற்று மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கல பதக்கம் வென்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை வேலுார் சி.எஸ்.ஐ., பேராயர் ஹென்றி ஷர்மா நித்தியானந்தம், தாளாளர் ஸ்டான்லி ஜோன்ஸ், தலைமை ஆசிரியர் டேவிட் சுரேஷ் பாபு, உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளை பாராட்டினார்.