ADDED : செப் 01, 2025 11:13 PM
மயிலம்: மயிலம் அடுத்த கொல்லியங்குணம் பவ்டா கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ் துறை சார்பில் இதழியல் குறித்த ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் சுதா கிறிஸ்டி ஜாய் தலைமை தாங்கினார். பவ்டா நிறுவன நிர்வாகி அல்பின் ஜாஸ் முன்னிலை வகித்தார். துணை முதல்வர் சேகர் துவக்க உரையாற்றினார். இரண்டாம் ஆண்டு மாணவி சவுமியா வரவேற்றார்.
மாநில தமிழ் இலக்கியச் சாரல் விழுப்புரம் மாவட்ட தலைவர் பழனி 'இதழியல் வளர்ச்சியும் சமூக முன்னேற்றமும்' தலைப்பில் பேசினார்.
பவ்டா கல்விக் குழும இயக்குநர் பழனி, துணை முதல்வர் சேகர், பவ்டா நிர்வாக அலுவலர் மற்றும் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
உதவி பேராசிரியர்கள் சிவமதி, சுகந்தி, சவுந்தர்ராஜன், நிரோஷா, தேன்மொழி பங்கேற்றனர்.